rajinikanth hospitalised rajinikanth Apollo : ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது. ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை எனவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் விளக்கமளித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது, நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து 22-ம் தேதி ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. அதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்.
கோவிட் -19 தொற்று அறிகுறிகள் ரஜினிகாந்துக்கு இல்லை. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ரத்த அழுத்த மாறுபாடு இருப்பதாகவும் அதனால் அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் சீரான பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.