Rajinikanth is acting in two films after Jailer, ஜெயிலர் முடிந்த கையோடு 2 புதிய படத்தில் ரஜினிகாந்த்? | Indian Express Tamil

ஜெயிலர் முடிந்த கையோடு 2 புதிய படத்தில் ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த் புதிதாக 2 படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் முடிந்த கையோடு 2 புதிய படத்தில் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் புதிதாக 2 படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களையும் அவர் லைகா தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.

அந்த வகையில் முதல் படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்றும் மற்றொரு படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை நெல்வன் திலிப்குமார் இயக்கிவருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
படத்தில் ரஜினிகாந்த்துடன் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர். இது கன்னட நடிகர் சிவ ராஜ் குமாருக்கு அறிமுக தமிழ் படமாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rajinikanth is acting in two films after jailer