Advertisment

"சூப்பர் ஸ்டார்னா அது…" : நடிகர் சத்யராஜ் தடாலடி பதில்

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான். அதை யாராலும் மாற்ற முடியாது- நடிகர் சத்யராஜ்

author-image
WebDesk
New Update
Rajinikanth Sathyaraj

ரஜினிகாந்த் - சத்யராஜ்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று முன்வைத்து தமிழ் சினிமாவில் சர்ச்சை கிளிம்பிய நிலையில் நடிகர் சத்யராஜ்

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.

Advertisment

ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தில் ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்துள்ளார்.மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார். மோகன் டச்சு என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் பிரோமோசன் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட்19) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான் என்றும், அதை யாராலும் மாற்ற முடியாது என்றும் கூறினார்.

சூப்பர் ஸ்டார் என்றாலே கடந்த 45 வருடமாக ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறார். அதை மாற்றக் கூடாது.

என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் தான். எம்.ஜி.ஆர்-யை மக்கள் திலகம் என்று சொல்கிறோம். அடுத்த மக்கள் திலகம் யார் என்று கேட்க முடியாது. தளபதி என்றால் விஜய், தல என்றால் அஜித் என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று முன்வைத்து சர்ச்சை ஏற்பட்டது. விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒரு தரப்பினரால் கூறப்பட்டது. அவரின் படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருவதன் அடிப்படையில் கூறப்பட்டது. ரஜினியின் அண்ணாத்த படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இந்த சர்ச்சையும் ஏற்பட்டது. ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ரஜினியே அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம் குறித்து பேசியது திரைத்துறை மட்டும் அல்ல பல்வேறு தரப்பிலும் பேசு பொருளானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Sathyaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment