Rajinikanth Jailer movie Tamil News: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisment
இந்த படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல், படத்தின் டிரைலரும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
அமெரிக்காவில் மில்லியன் டாலர் வசூல்
Advertisment
Advertisements
இந்நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இந்த ஆண்டு அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைக்க உள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, அமெரிக்காவில் ஜெயிலர் படத்திற்கான முன்பதிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் பிரீமியர்களுக்கான முன் விற்பனை இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில், ஏற்கனவே படத்தின் விற்பனை 5 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலரரைத் தாண்டியுள்ளது.
ஜெயிலர் படத்தின் பிரீமியர் காட்சிகள் வருகிற புதன்கிழமை 600க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் படத்தின் விற்பனை ஒரு மில்லியன் டாலரை தாண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி ஒரு மில்லியனை தாண்டும் பட்சத்தில், 2023-ல் படத்தின் பிரீமியர் நாளுக்கு முன்னபே ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்த படமாக ஜெயிலர் படம் இருக்கும். மேலும், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு இது இரண்டாவது மில்லியன் டாலர் திரைப்படமாகவும் இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil