சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜுஜுபி’ என்ற 3வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் மாஸாக இருக்கும் ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல் வெயிடப்ப்பட்டது. காவாலா பாடல் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் திணறடித்தது. காவாலா பாட்டுக்கு தமன்னா ஆடிய டான்ஸில் ரசிகர்கள் மயங்கிப் போயிருக்கிறார்கள். ஆனால், இந்த பாடலில் ரஜினி அவருடைய டிரேட் மார்க் மூவ்மெண்ட் 2 ஸ்டெப்களைப் போட்டுவிட்டு கடந்து செல்கிறார்.
இதையடுத்து, ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள உங்கொப்பன் விசிலைக் கேட்டவன் பாடல் 2-வது பாடலாக படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த வெளியாகி ரஜினியின் மாஸை மீண்டும் உறுதி செய்தது. ரஜினி ரசிகர்கள் இந்த பாடலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ட்ரெண்டிங் செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கான காட்சிகளில் நடிக்க மாலத்தீவுக்கு சென்று நடித்துவிட்டு, படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் விமானத்தில் இருந்து இறங்கி, அவருக்கே உரிய ஸ்டைலில் வேகமாக நடந்து சென்று விமான நிலையப் பேருந்தில் ஏறி அமரும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வயதிலும் ரஜினிகாந்த் அதே வேகத்துடனும் ஸ்டைலுடனும் இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜுஜுபி’ என்ற பாடலை 3வது பாடலாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘ஜுஜுபி’ என்று தொடங்கும் இந்த பாடலில், ‘காளைக்கே கொம்ப சீவிப்புட்டே’ என்ற வரிகள் ரஜினியின் அதிரடி ஆக்ஷனைக் குறிப்பிடுகிறது.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் ‘ஜுஜுபி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த பாடலை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"