Advertisment

ரஜினிகாந்த் அடுத்த படம் ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த லைகா

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான விநியோகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் லைகா தயாரிப்பு நிறுவனம் கைகோர்த்துள்ளது. 

author-image
WebDesk
New Update
Laal Salaam

ரஜினிகாந்த் அடுத்த படம் ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் கைகோர்த்த லைகா

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான விநியோகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் லைகா தயாரிப்பு நிறுவனம் கைகோர்த்துள்ளது. 

Advertisment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எழுதி இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘லால் சலாம்’ படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் விஜயின் உறவினர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தனது படத்தின் விநியோக பார்ட்னரை அறிவித்தது.   “லால் சலாம் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் உடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பிரமாண்டமான திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.” என்று லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் முன்பு இருந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ், தமிழ்நாட்டில்  ‘லால் சலாம்’ படத்தின் விரிவான விநியோகத்தை மேற்பார்வையிடும் என்று சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய்யின் பீஸ்ட், வாரிசு, கமல்ஹாசனின் விக்ரம், அஜித்தின் துணிவு, மணிரத்ணத்தின் பொன்னியின் செல்வன், ஷாருக்கானின் ஜவான் படத்தின் தமிழ் ரிலீஸ் ஆகிய படங்களின் விநியோக உரிமையைப் பெற்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது. 

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ‘லால் சலாம்’ படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பரில், ஐஸ்வர்யாவுடன் ஹார்மோனியம் வாசிக்கும் வீடியோவை ஏ.ஆர்., ரஹ்மான் பகிர்ந்து கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகளான இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதற்கு முன் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2012 ஆம் ஆண்டு 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனரக அறிமுகமானார். தற்போது தான் பிரிந்திருக்கும் தனது கணவர் தனுஷை ஹீரோவாக இயக்கினார். இதைத் தொடர்ந்து 2015-ல் வை ராஜா வை படத்தை இயக்கினார். இப்படத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment