பல வருடங்களுக்குப் பிறகு செட்டுக்கு வந்த லதா ரஜினிகாந்த், வைரலான புகைப்படம்!

நாற்காலியில் ஸ்டைலிஷாக ரஜினி உட்கார்ந்திருக்கும் இந்தப் படத்தை ஏதேச்சையாக யாரோ க்ளிக் செய்திருக்கிறார்கள்.

By: Published: October 1, 2019, 10:36:18 AM

Rajinikanth’s Latest Still with Latha Rajinikanth: தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் தம்பதியினர் ஸ்டார் கப்பிளாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மற்ற திரை பிரபலங்கள் போலல்லாமல், இவர்களின் அன்பு பிணைப்பை வெளியிடங்களிலோ, புகைப்படங்களிலோ பார்ப்பது அரிதினும் அரிதான ஒன்று.

மேலே இருக்கும் இந்தப் படம் சமீபத்தில் கிளிக் செய்யப்பட்ட மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் இருக்க வேண்டும். இந்தப் படம் ரஜினி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது. ரஜினியின் கழுத்தில் கைகளைப் போட்டிருக்கும் லதாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து அத்தனை பிரகாசமாக இருக்கிறது.

நாற்காலியில் ஸ்டைலிஷாக ரஜினி உட்கார்ந்திருக்கும் இந்தப் படத்தை ஏதேச்சையாக யாரோ க்ளிக் செய்திருக்கிறார்கள். உடனே இந்த படம் சமூக ஊடக தளங்களிலும் இணையத்திலும் வைரலாகி விட்டது. ஏன் வைரலாகாது? மகிழ்ச்சி கலந்த முகத்துடன் சூப்பர் ஸ்டாரும், அவரது மனைவியும் இடம் பெற்றிருக்கும் இந்தப் படம் 35 ஆண்டுகளுக்கும் மேலான திருமண பந்தத்தை இப்படம் மிக அழகாக காட்டுகிறது!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Rajinikanth latha rajinikath darbar set picture goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X