ஆங்கிலத்தில் படிக்க...
கடந்த சில தினங்களாக தலைவர் 170 படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய லைகா நிறுவனம் தற்போது படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் குறித்து கடந்த இரு தினங்களாக அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிக்கும் படங்களின் விபரங்களை ரகசியமாக பாதுகாத்து வரும் இந்த காலக்கடத்தில் லைகா நிறுவனம் தனது படத்தின் அத்தனை விபரங்களையும் பட பூஜைக்கு முன்பாகவே வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது தலைவர் 170 படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புகைப்படங்களில், ரஜினிகாந்த் இளமையாகவும், வெளிர் நீல நிற சட்டை மற்றும் ஐவரி பேண்ட் அணிந்து காணப்படுகிறார். அவர் தனது படங்களில் இதுவரை முயன்றிராத ஒரு வெள்ளைக் தாடி மற்றும் அடர்ந்த கருப்பு மீசையுடன் இருக்கிறார். இந்த விழாவில் ரஜினிகாந்துடன் மஞ்சு வாரியர், இயக்குனர் டி.ஜே.ஞானவேல் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர்களின் அடிப்படையில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த மிகப் பெரிய படமாக தலைவர் 170 இருக்கும் என்று தெரிகிறது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க உள்ள நிலையில். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
சூர்யாவின் ஜெய் பீம் படத்தின் மூலம் புகழ் பெற்ற டி.ஜே.ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் ஒருசமூக செய்தியுடன் கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 170 படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பெயர் தற்காலிகமாக தலைவர் 171 என்று குறிப்பிடப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“