/indian-express-tamil/media/media_files/qNpB0aU4ggE6Iw83auc3.jpg)
லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்தில் ரஜினியின் தோற்றத்தை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில், மேக்அப் டெஸ்ட்டில் ரஜினியின் மாஸ் கெட்டப்பை தானே புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும், ஜூலை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எத்தனை வயதானாலும் இன்றும் பாக்ஸ் ஆஃபீஸ் கிங்காகவே இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து முதல் இடத்தில் உல்ளது. இதையடுத்து, ரஜினிகாந்த் நடித்துள்ள 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ புகழ் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வேட்டையன் படப்பிடிப்பு முடித்த பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றார். இமயமலை ஆன்மீகப் பயணம் முடித்து, மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்
அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ரஜினி நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் வெளியான வேட்டையன் படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Look test for #Coolie 🔥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 26, 2024
On floors from July pic.twitter.com/ENcvEx2BDj
இந்நிலையில், கூலி படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்தில் ரஜினியின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளார். கருப்பு உடையில் ரஜினியின் மாஸ் கெட்டப் போட்டோக்கள் சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் கூலி படத்தில் ரஜினியின் கெட்டப் மாஸாக இருக்கிறது என்று கம்மெண்ட் செய்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.