ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சிப் பதிவிட்டுள்ளார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியானது. ஜெயிலர் படம் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் வசூலை வாரிக் குவித்து வருகிறது.
ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீகம் பயணம் மேற்கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று இறங்கிய பின்னர், உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என வரிசையாக அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
ரஜினிகாந்த் ஜார்க்கண்ட் சென்று, சின்னமாஸ்தா கோயிலில் வழிபாடு செய்தார். யசோதா ஆசிரமத்தில் ஒரு மணிநேரம் தியானம் செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநிலத்திற்கு சென்று யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் ஜெயிலர் படத்தைப் பார்த்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் உத்த்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ்யாதவ்வை லக்னோவில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சிப் பதிவிட்டுள்ளார்.
அதில், “இதயங்கள் சந்தித்த பொழுது தழுவிக் கொண்டன. மைசூரில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது ரஜினிகாந்தை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம், அன்றிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”