ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்ட ‘2.0’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படம் முழுக்க முழுக்க 3டி கேமராக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சி பணிகள் விரைவில் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அந்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், நவம்பர் 29ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

2016 அல்லது 2017ம் ஆண்டே இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தாலும் கிராஃபிக்ஸ் உருவாக்கம் பணிகள் நிதானமாகவே நடந்திருந்தது. படம் முழுவதுமே 3டி காட்சிகளாகவும், 3டி கேமராவில் படப்பிடிப்பு நடந்தது தான் காரணம். இந்த வேலைகள் கடினமாக இருந்ததால் தாமதம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த காத்திருப்பு பூர்த்தியாகும் வரையில், இயக்குநர் சங்கர் படத்தின் ரிலீஸ் தேதியை டுவீட் செய்துள்ளார். அதில், “இறுதியாகப் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளை முடித்துத் தருவதாக விஎஃபெக்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும், இதனால் படம் நவம்பர் மாதம் 29 – ம் தேதி திரைக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த ‘எந்திரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைத் தழுவியுள்ள நிலையில், அதன் அடுத்த பிரம்மாண்டம் நவம்பர் மாதம் வெளியும் என்ற அறிவிப்பு உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

×Close
×Close