/tamil-ie/media/media_files/uploads/2020/01/rajini-2..jpg)
ரஜினிகாந்தின் 168-வது படத்திற்கு ‘அண்ணாத்த’ என பெயரிடப்பட்டிருக்கிறது. படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தர்பார் படத்திற்கு அடுத்தபடியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் இதில் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு அண்ணாத்த உள்பட சில பெயர்கள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு வந்தன.
#Thalaivar168 is #Annaatthe#அண்ணாத்த@rajinikanth@directorsiva@KeerthyOfficial@immancomposer@prakashraaj@khushsundar@sooriofficial@actorsathishpic.twitter.com/GtaYEoKf6N
— Sun Pictures (@sunpictures) February 24, 2020
இன்று (24-ம் தேதி) மாலையில் படத்தின் தலைப்பை அதிகாரபூர்வமாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. படத்திற்கு, அண்ணாத்த என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதும் ரஜினி ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.