/tamil-ie/media/media_files/uploads/2022/02/thalaivar-169.jpg)
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய புதிய படமான ‘ரஜினி 169’ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருந்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இதையடுத்து, ரஜினிகாந்த் நடிக்கும் அவருடைய 169வது படத்தைப் பற்றிய அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ், நெல்சன், சிறுத்தை சிவா உள்ளிட்ட இயக்குனர்கள் இயக்குவார்கள் என்ற பேச்சுகள் உலா வந்தன.
இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த்தின் அடுத்த படமான ரஜினி 169 படத்தை தயாரிப்பதாகவும் ரஜினி 169 பற்றிய அறிவிப்பு இன்று வேற மாதிரி வெளியாகும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியது.
இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது என்று அலர்ட் செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
#Thalaivar169BySunPictures:
— Sun Pictures (@sunpictures) February 10, 2022
▶ https://t.co/EFmnDDnBIU
Presenting Superstar @rajinikanth’s #Thalaivar169 directed by @Nelsondilpkumar and music by @anirudhofficial
இதனைத் தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’ திரைப்படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘தலைவர் 169’ படத்தை அறிவிக்கும் வீடியோவில் முதலில் அனிருத் கண்ணாடி அணிந்து ஸ்டைலாக வருகிறார். அவருக்கு அடுத்து இயக்குனர் நெல்சன் கோட் சூட் கண்ணாடி அணிந்து ஸ்டைலாக வருகிறார். இவர்களை அடுத்து யங் ரஜினி வ்ருகிறார். ரஜினியின் 169வது படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தலைவர் 169வது படத்தில் ரஜினிகாந்த் யங்கான தோற்றத்தில் ஸ்டைலாக கண்ணாடி அணிந்து கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்து போஸ் கொடுக்கிறார்.
ரஜினி நடித்து வெளிவந்த கடந்த சில படங்களில், ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் மிகவும் யங்காக ஸ்டைலாக இருப்பார் என்று தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.