அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா கீர்த்தி சுரேஷ், ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். சன்பிச்சர்ஸ் தயாரித்த இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்திற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக தர்பார் படமும் கலவையாக விமர்சனங்களை பெற்ற நிலையில், தனது ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார்.
டாக்டர் பீஸ்ட் படங்களை தொடர்ந்து, இயக்நர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாத்தபடத்தை தொடர்ந்து இந்த படத்தையும் சன்.பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் தமிழ் புததாண்டு தினத்தில் வெளியாகி வரவேற்பை பெற தவறிவிட்டது.
மேலும் இந்த படத்தின் இயக்குநர் நெல்சன் குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியான நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயிலர் படத்தை நெல்சன் வெற்றிப்படமாக கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பீஸ்ட் படம் வெளியாகும் முன்பே அறிவிக்கப்பட்ட ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
#Jailer begins his action Today!@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/6eTq1YKPPA
— Sun Pictures (@sunpictures) August 22, 2022
மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யாராய், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர். இதனிடையே ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சன்பிச்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“