/tamil-ie/media/media_files/uploads/2022/10/Rajinikanth.jpg)
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடகா ரத்னா வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். இவர் கடந்தாண்டு அக்.29ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணித்தார். அப்போது அவருக்கு வயது 46.
இவரின் மரணம் மாநிலத்தை உலுக்கியது. மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் திரண்டு வந்து புனித் ராஜ்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். புனித் மாநில அரசின் பல விளம்பரங்களுக்கு பணம் பெறாமல் நடித்து கொடுத்துள்ளார். மேலும் பல்வேறு மக்கள் பணிகளிலும் ஈடுபட்டுவந்தார்.
இந்த நிலையில் கர்நாடகாவின் மிக உயர்ந்த மக்கள் விருதான கர்நாடக ரத்னா விருது புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இதையடுத்து வரும் நவம்பர் 1ஆம் தேதி புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படுகிறது.
மாநில சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெள்ளிக்கிழமை (அக்.28) தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் விழாவில் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புனித் ராஜ்குமாரின் நடிப்பில் ஏற்கனவே ஜேம்ஸ் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
தற்போது அவரின் கடைசி படமான கந்தத குடி (நானும் இயற்கையும்) என்ற படம் வெளியாகி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.