/indian-express-tamil/media/media_files/41RGUSNJuhiNeh8zkKhh.jpg)
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
Rajini Kanth நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது தனது 170-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு வேட்டையன் என்று பெயர் வைத்துள்ளனர். ரஜினியின் 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'வேட்டையன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் ரஜினிகாந்த் நிற்கும் படத்துடன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பொங்கல் வாழ்த்துடன் வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி பொங்கல் வாழ்த்து
இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார். இதுதொடர்பாக, சென்னை போயர்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த பொன்நாளில் நான் இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும். நன்றி வணக்கம்." என்று அவர் கூறினார்.
The Art behind the aesthetic! 🎨✨ Delve into the making of the vibrant & colourful VETTAIYAN 🕶️ poster! ✨
— RIAZ K AHMED (@RIAZtheboss) January 15, 2024
Art by 🖌️ @sthabathy
Designed by 🖼️ @gopiprasannaa
Photographed by 📸 @anand16na#VETTAIYAN 🕶️ @rajinikanth@SrBachchan@tjgnan@anirudhofficial@LycaProductions… pic.twitter.com/sxTAgjdmHW
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.