/indian-express-tamil/media/media_files/2024/10/19/gZT3LxLLRSXF3CB916Zo.jpg)
ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வெளியான படம் 'தி கோட்'. இப்படம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் விஜய்யுடன் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். டீ ஏஜிங் என புதிய தொழில்நுட்பத்தில் விஜய் காட்சி படமாக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனத்தை பெற்றது.
Thank you, Thalaivaaaa!! for the call and for embracing our #GOAT with so much love. Thanks again for appreciating wholeheartedly. Forever grateful, sending you all the love. ♥️♥️♥️♥️ @rajinikanth 🙏🏽🙏🏽
— venkat prabhu (@vp_offl) October 19, 2024
அதே நேரம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவித்தது. படம் ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் படைத்தது .
இந்த நிலையில் கோட் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கோட் படத்தை பார்த்து தொலைப்பேசியில் அழைத்து முழு மனதுடன் பாராட்டியதற்கு நன்றி தலைவா. என்றென்றும் நன்றியுடன், அன்பை உங்களுக்கு அனுப்புகிறேன் என நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.