ரஜினி திரைப்பயணத்தில் மற்றொரு மகுடம் சிறப்பு நட்சத்திர விருது! காண வேண்டிய புகைப்படத்தொகுப்பு

இந்தியில் அமிதாப் என்றால் தமிழில் ரஜினி தவிர வேறு யாரு இருக்கா

இந்தியில் அமிதாப் என்றால் தமிழில் ரஜினி தவிர வேறு யாரு இருக்கா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajinikanth twitter

rajinikanth twitter

rajinikanth twitter : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்த பெயருக்கு பின்னால் ஒலிக்கும் ரசிகர்களின் குரல்கள், தலைவா என்று அழைக்கும் உரிமையான உறவுகள் தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்தவொரு நடிகருக்கும் கிடைக்கவில்லை. இனிமேல் கிடைக்கபோவதும் இல்லை. 44 வருடங்களை கடந்த சினிமா பயணத்தில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் என்றும் ஓய்வு இல்லாத ரஜினிக்கு மேலும் கவுரவம் சேர்க்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருதை அறிவித்துள்ளது.

Advertisment

1975 ம் ஆண்டு அபூர்வ ராகங்களில் தொடங்கிய இவரின் பயணம் தர்பார் அடுத்த என்ன வியூகம் என தொடர்ந்து கொண்டே செல்கிறது. ரஜினியின் முள்ளும் மலரும் படத்தை பார்த்தவர்கள் இவ்வளவு நாள் இந்த மனுஷயன் எங்கய்யா இருந்தா? என்று கேட்டனர். சூப்பர் ஸ்டார் என்ற பெயர் எடுப்பதற்கு முன் ரஜினி தன் திரைப்பயணத்தில் பல கஷ்டங்களை சந்தித்தார். பல படங்களில் இரண்டாம் கட்ட நாயகானகவே நடித்து வந்தார். இந்நிலையில் ஹிந்தியில் அமிதாப் நடிப்பில் வெளிவந்த டான் படத்தின் ரீமேக்கான பில்லா படமே ரஜினி திரைப்பயணத்தில் பெரிய மாற்றம் உருவாக்கியது.

இன்று இந்தியில் அமிதாப் என்றால் தமிழில் ரஜினி தவிர வேறு யாரு இருக்கா?

Advertisment
Advertisements

ரஜினியின் அரசியல் கருத்து ஏகப்பட்ட விமர்சனங்களை சந்திருந்தாலும் திரையில் ஒரு நாயகனாக இன்றும் அவர் மீதுள்ள கிரேஸ் குறையவே குறையாது, அதன் காரணமாகவே 44 வருடங்களாக ஒருவர் முதலிடத்தில் இருக்கின்றார் என்றார் அது சூப்பர் ஸ்டார் மட்டுமே.

இந்த நேரத்தில் ரஜினியின் திரைப்பயணம் காணவேண்டிய அரிய புகைப்பட்த்தொகுப்பை பார்க்கலாம் வாங்க.

publive-image

 

publive-image

 

publive-image

 

publive-image

 

publive-image

 

publive-image

publive-image

ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திர விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். திரையுலகத்தை சேர்ந்த அனைவரும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: