/tamil-ie/media/media_files/uploads/2019/02/Rajinikanth-rare-unseen-photo-6.jpg)
Rajinikanth rare unseen photo
Rajinikanth rare unseen photo : “சூப்பர்ஸ்டார்” என்று அனைவராலும் செல்லமாகவும் பெருமையுடனும் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த்.
இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகரான இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Rajinikanth rare unseen photo : ரஜினிகாந்த் அரிய புகைப்படம்
“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்ன குழந்தைகளை சொல்லும்”... என்ற பாடல் வரிகள் ரஜினிக்கு கட்சிதமாக பொருந்தும்.இவர்தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவையும் தாண்டி , ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகன் ரஜினி.
இவரின் படங்கள் மட்டுமின்றி இவரின் பாடல்கள் கூட எல்லாமே பெரிய அளவில் ஹிட் தான். குறிப்பாக இவரின் ரசிகர்கள் அனைவரும் இவரின் புகைப்படத்தை வெறிக்கொண்டு தேடி செல்போன், லேப்டாப் என அனைத்திலும் வால் பேப்பராக வைத்திருப்பார்கள்.
அந்த வகையில் இவரின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தையே ஒரு கலக்கு கலக்கு வருகிறது. நீலக் கலர் சட்டையில் ஸ்டைலாக நிற்கும் ரஜினியின் கெத்து இன்றளவும் குறையவில்லை என்பதையே இந்த புகைப்படம் உணர்த்துகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/rajinikanth-unseen-picture-819x1024.jpg)
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது 10 பாட்டில் க்ளூக்கோஸ் உடலில் ஏற்றியது போல் இருப்பதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.