ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள வேட்டையன் படம் நாளை மறுநாள் (அக்டோபர் 10) வெளியாக உள்ள நிலையில், 33 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் – ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ஹம் என்ற படததில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் பாட்சா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
Read In English: Rajinikanth recalls how Amitabh Bachchan had to sell his home, work 18 hours a day to pay off debt: ‘He went to Yash Chopra’s home wearing monkey cap…’
சமீபத்தில் நடைபெற்ற வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் பச்சனுக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்த ரஜினிகாந்த், அமிதாப் நிறைய கடனை அடைத்ததையும், அதை அடைக்க 18 மணி நேர வேலை நாட்களை சகித்துக் கொண்டதையும் கூறியிருந்தார். மேலும் அமிதாப் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் தனிமையில் வாழ்வதற்காக எல்லாவற்றையும் விட்டுச் சென்றதைப் பற்றிய ஒரு கடுமையான நினைவைப் பகிர்ந்து கொண்டார்.
அதே சமயம் அவருக்கு இந்த காலக்கட்டம் மிகவும் குறுகியதாக இருந்தது. அமிதாப் தனது சொந்த நிறுவனமான அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஏபிசிஎல்) தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக, ஏபிசிஎல் தோல்வியடைந்தது, அவரது நிறுவனம் திவால் ஆனது. இதற்காக அமிதாப் தனது பிரியமான ஜூஹு வீடு உட்பட மும்பையில் உள்ள சொத்துக்களை விற்க வேண்டிய கடினமான நேரங்களையும், பம்பாய் திரையுலகில் சிலர் அவரது வீழ்ச்சியைக் கொண்டாடியதையும் ரஜினி நினைவு கூர்ந்தார்.
இந்த காலக்கட்டத்தில், வேலை கேட்டு அமிதாப் யாஷ் சோப்ராவை அணுகியபோது அவருக்கான வாய்ப்பை யாஷ் உடனடியாக வழங்கினார். இதற்காக அவர் கையெழுத்திட்ட காசோலையைக் கொண்டு வந்து கொடுத்தார், ஆனால் அமிதாப் தனக்கு வேலை கொடுத்தால் மட்டுமே இந்த காசோலையை எடுப்பேன் என்று மறுத்துவிட்டார். இதனால் மொஹபதீன் படத்தில் நடிக்க யாஷ் அவருக்கு வாய்ப்பளித்தார். இதன் மூலம் அமிதாப் தனது 2-*வது இன்னிங்சை தொடங்கினார்.
அந்த காலகட்டத்திலிருந்து அமிதாப் பச்சன் பணி நெறிமுறையைப் பாராட்டி வரும் ரஜினிகாந்த், “அவர் எதையும் செய்தார். எல்லாவிதமான விளம்பரங்களையும் செய்தார். இதைப் பார்த்து பம்பாய் தொழில்துறையில் உள்ளவர்கள் மீண்டும் அவரை வரவேற்றினர். மூன்று ஆண்டுகளாக, பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைத்து, தனது அனைத்து கடனையும் அடைத்துள்ளார். பழைய வீட்டைத் திரும்ப வாங்கியது மட்டுமல்ல, அதே பாதையில் மொத்தம் மூன்று வீடுகளை வாங்கினார். அமிதாப் பச்சன் தான்! அவருக்கு இப்போது 82 வயது, இன்னும் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறார் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“