Advertisment

இந்தியில் பிஸியான ஸ்ரீதேவியை அடம்பிடித்து அழைத்து வந்த ரஜினிகாந்த்: அதிலும் இந்தப் பாட்டு ரொம்ப ஸ்பெஷல்!

ஹிந்தி பாடலுக்கு நிகராக உருவாக்கப்பட்ட தமிழ் பாடலும் செம ஹிட்; பாலிவுட்டில் பிஸியாக இருந்த ஸ்ரீதேவியை அடம்பிடித்து அழைத்து வந்த ரஜினிகாந்த்; சுவாரஸ்ய பின்னணி இங்கே

author-image
WebDesk
New Update
naan adimai illai

பாலிவுட்டில் பிஸியாக இருந்த ஸ்ரீதேவியை அடம்பிடித்து அழைத்து வந்த ரஜினிகாந்த்; சுவாரஸ்ய பின்னணி இங்கே

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியில் ஹிட் ஆன பாடலுக்கு நிகராக தமிழ் ரீமேக்கில் உருவாக்கப்பட்ட பாடலும் செம ஹிட் ஆனது. ரஜினிகாந்த் படத்தின் அந்த பாடல் குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

ரஜினிகாந்த் நடித்த நான் அடிமை இல்லை படத்தில் இடம்பெற்ற ’ஒரு ஜீவன் தான்’ பாடல் உருவான விதம் குறித்து சுபஸ்ரீ தணிகாசலம் தனது யூடியூப் வீடியோவில் சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

ஹிந்தியில் செம ஹிட் ஆகி 7 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படத்தின் தமிழ் பதிப்பு தான் ரஜினிகாந்த் நடித்த நான் அடிமை இல்லை படம். இந்தப் படத்திற்கு இசை விஜய் ஆனந்த். ஹிந்தி படத்தில் ’தும் சே’ என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதற்கு நிகராக தமிழிலும் ஒரு பாடலை உருவாக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படி அதே ராகத்தில் உருவான பாடல் தான் ‘ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்’ பாட்டு. இந்தப் பாடலை வாலி எழுத, எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி பாடியிருப்பர். 

இந்தப் பாடத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். அந்த சமயத்தில் ஸ்ரீதேவி பாலிவுட்டில் செம பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இயக்குனர் துவாரகேஷ், ரஜினிகாந்திடம் கதை சொன்னபோது, இந்தப் படத்தில் ஸ்ரீதேவி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என ரஜினிகாந்த் வலியுறுத்தி கூறியிருக்கிறார். ஆனால், இயக்குனர் ஸ்ரீதேவி பிஸியாக இருக்கிறார் என கூற, ரஜினிகாந்த் நேரடியாக ஸ்ரீதேவிக்கு போன் செய்து நடிக்கக் கேட்டிருக்கிறார். உடனே ஸ்ரீதேவியும் ஒப்புக் கொண்டு இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.  

QUARANTINE FROM REALITY - EPISODE 631 #qfr #SPB #SJANAKI Episode 631 Performed by : Voice Of Venkat Rishipriya...

Posted by Subhasree Thanikachalam on Friday, March 29, 2024

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Sridevi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment