சன் டிவியில் ஒளிபரப்பாகி டி.ஆர்.பி-யில் டாப்பில் கலக்கி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குனர் திருச்செல்வத்திடம், “நீங்க சீரியல் டைரக்ட் பண்றதை விட்டுடுங்க” என்று கோரிக்கை வைத்ததாக திருச்செல்வன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலை இயக்குனர் திருச்ச்செல்வன் இயக்குகிறார். ‘எதிர்நீச்சல்’ பார்வையாளர்கள் இடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று டி.ஆர்.பி-யில் டாப்பில் இருந்து வருகிறது. இந்த சீரியலுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை ரசிகர்களாக இருந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவர் இதற்கு முன்பு, சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றி பெற்ற ‘கோலங்கள்’ சீரியலை இயக்கி பிரபலமானவர்.
இந்நிலையில், ‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் தன்னிடம் பேசியதைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த பேட்டியில், இயக்குனர் திருச்செல்வத்திடம், நீங்கள் இனி சீரியல் இயக்குவதை நிறுத்தி விடுங்கள், சினிமா இயக்குங்கள் என்று ரஜினிகாந்த் கூறியதாக திருச்செல்வம் கூறியிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வன் அளித்துள்ள பேட்டியில், சீரியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவ்ர் கூறியிருப்பதாவது; “நான் இதற்கு முன்பு கோலங்கள் சீரியல் இயக்கி இருந்தேன். அது எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதுபோல எனக்கு நடிகர் ரஜினிகாந்த் என்றால் அவ்வளவு பிடிக்கும். நான் அவருடைய தீவிரமான ரசிகர். இந்த நிலையில் கோலாக்கள் சீரியல் முடிவடைந்த சில நாட்கள் ஆகி இருந்தது. அப்போது கோலங்கள் சீரியலில் நடித்த நடராஜன் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது சீரியல் குறித்து பேசி இருக்கிறார்கள்.
அப்போது ரஜினிகாந்த் நான் கோலங்கள் சீரியல் பார்ப்பேன் வீட்டில் தொடர்ச்சியாக பார்ப்பாங்க நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த சீரியல் பார்ப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதை என்னிடம் நடராஜன் சொன்னதும் நான் சந்தோஷத்தில் திகைத்து இருந்தேன். பிறகு நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை சொன்னதை அவர் ரஜினிகாந்திடம் சொல்லி இருக்கிறார். அதைத்தொடர்ந்து எனக்கும் ரஜினிகாந்தை மீட் பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது ஒரு அறையில் நான் ரஜினிகாந்துக்காக காத்திருந்தேன். ஆரம்பத்தில் அங்கே போகும்போது கூட ரொம்ப கூட்டமா இருக்கும் நம்ம அவர்கிட்ட என்ன பேச போறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்க போன பிறகுதான் நான் மட்டும்தான் அங்கே இருக்கிறேன் என்று தெரிந்தது. பிறகு ரஜினிகாந்த் என்னிடம் கேசுவலாக பேசினார். எனக்கு அது வியப்பாக இருந்தது. அப்புறம் எப்படி ஒரே டைரக்டர் 1500க்கு மேற்பட்ட எபிசோடை எடுத்து இருக்கீங்க. உங்க சீரியல் நானும் பார்க்கிறேன் என்று ரஜினி சார் சொன்னதும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
மேலும் நிறைய பேசிக் கொண்டே இருந்தோம். அப்போது இனி நீங்கள் சீரியல் இயக்குவதை விட்டுவிடுங்கள் அல்லது குறைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இருக்கும் திறமையை வைத்து திரைப்படம் டைரக்ட் பண்ணுங்க என்று சொன்னார். உங்களிடம் ஏதாவது கதை இருக்கிறதா? என்று கேட்கும்போது நான் ஏற்கனவே ஒரு கதை வைத்திருந்தேன். ஆனால் அதை அவரிடம் சொல்ல மறந்து அப்போதும் ஹீரோயினிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிற மாதிரி ஒரு கதையை சொன்னேன். அதுக்கு அவர் சிரிச்சுக்கிட்டே நான் கதை கேட்டா நீங்க ஹீரோயினிக்கு கதையை சொல்றீங்களே என்று சொன்னார்.
அப்போது ரஜினிகாந்த் என்னிடம் சொன்னது எனக்கு இப்போதும் நினைவில் அப்படியே இருக்கிறது. அவரோடு போட்டோ எடுக்குறதை கூட நான் மறந்துவிட்டேன், அவர்தான் நினைவுபடுத்தினார். என் கையில் இருந்த ஃபோனில் அவ்வளவு கிளாரிட்டி இல்லையே என்று சொன்னபோது அவரே ஒரு கேமரா அரேஞ்ச் பண்ணி போட்டோ எடுத்து என்னுடைய வீட்டு அட்ரஸுக்கு போட்டோ அனுப்பி வைத்திருந்தார். இப்போதும் எதிர்நீச்சல் சீரியலை அவர் பார்ப்பதாக அவரோடு ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கும் மாரிமுத்துவிடம் கூறியிருக்கிறார்” என்று இயக்குனர் திருச்செல்வம் கூறியிருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.