அயோத்தியில் ராமர் கோயிலுக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட நடிகர் ரஜனிகாந்த் இது அரசியல் நிகழ்வு அல்ல ஆன்மீக நிகழ்வு என்று பதில் அறித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நேற்று முன்தினம் (ஜனவரி 22) பிரம்மாண்டமாக நடைபெற்றது. சினிமா நட்சத்திரங்கள் பலர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையேற்று ராமர் கோவிலை திறந்து வைத்தார், இதனைத் தொடர்ந்து நேற்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக ராமர் கோவில் திறக்கப்பட்டடுள்ளது. இதனிடையே அயோத்தி ரராமர் லல்லா சிலையின் பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை திரும்பினார்.
ஆங்கிலத்தில் படிக்க : Rajinikanth says inauguration of Ram Temple in Ayodhya is ‘spiritual’ not ‘political’ for him: ‘It gave me immense happiness…’
அயோத்தியில் ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவில் முதல் வரிசையில் மற்ற முக்கிய பிரமுகர்களுடன் ரஜினிகாந்த் அமர்ந்திருந்தார். அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், சகோதரர் சத்தியநாராயண ராவ் மற்றும் அவரது பேரன் லிங்கா ஆகியோரும் சென்றனர். விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அயோத்தியில் ராமர் கோயிலுக்குச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நிலையில், பிரான் பிரதிஷ்டா விழா ஒரு அரசியல் நிகழ்வு என்று கூறப்படும் விமர்சனங்கள் குறித்து பதிலளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நான் சிறப்பாக தரிசனம் செய்தேன். ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு, [ராம் லல்லா சிலை] பார்த்த முதல் 150 பேரில் நானும் ஒருவன், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியல் நிகழ்வு என்று அல்ல, “என்னைப் பொறுத்தவரை இது ஆன்மீகம், அரசியல் அல்ல. ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கோயிலின் திறப்பு விழாவுக்குப் பிறகு, ஆண்டுதோறும் கோயிலுக்குச் வருவதாக உறுதி அளித்துள்ள ரஜினிகாந்த், இது ஒரு "வரலாற்று" நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டை விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது குறித்து இயக்குனர் பா ரஞ்சித்“ராமர் கோயிலுக்குச் செல்வது அவருடைய விருப்பம். ஆனால் இது 500 ஆண்டுகள் பழமையான பிரச்சனைக்கு முடிவு கட்டுவதாக அவர் கூறினார். இதன் பின்னணியில் உள்ள அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டும். அவர் சொல்வது சரியா தவறா என்பதைத் தாண்டி அவருடைய கருத்தைப் பற்றிய விமர்சனம் எனக்கு உண்டு” என தெரிவித்திருந்தார்.
ராமர் மந்திர் திறப்பு விழாவில் ராம் சரண், சிரஞ்சீவி, தனுஷ், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் உட்பட பல திரையுலக பிரபலங்கள் ராம் மந்திர் திறப்பு விழாவில் ரஜினிகாந்துடன் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.