scorecardresearch

மாஜி கிரிக்கெட் ஸ்டாருடன் நடிகர் ரஜினிகாந்த் : லால் சலாம் புதிய அப்டேட்

லால் சலாம் படத்தை ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார்.

Laal Salam
ரஜினிகாந்த் லால் சலாம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில்தேவ்- சந்தித்து தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் மற்றுமு் லால் சலாம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் அடுத்து ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள் ஜெயிலர் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் நிலையில், லால் சலாம் படத்தை ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமியராக நடித்து வருவவதாக தகவல் வெளியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்ட லால்சலாம் படத்தில் இந்தியாவுக்காக முதல்முறையாக உலககோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில்தேவ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக கபில்தேவ்வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த் இது குறித்து உருக்கமான பதிவையும் புதிவிட்டுள்ளார்.

அதில், இந்தியாவுக்காக முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று பெருமைப்படுத்திய பழம்பெரும், மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனது பெருமையும் பாக்கியமும் ஆகும் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரஜினி மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rajinikanth share a photo with cricket star kapil dev laal salaam shooting