33 ஆண்டுகளுக்கு பிறகு வேட்டையன் படத்தின் மூலம் மீண்டும் அமிதாப் பச்சன் – ரஜினிகாந்த் கூட்டணி அமைத்துள்ள நிலையில், நேற்று நடைபெற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்கவில்லை என்றாலும், அவர் அனுப்பிய வீடியோ பதிவு திரையிடப்பட்டது.
பாலிவுட் சினிமாவில், முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அமிதாப் பச்சன் தற்போது இந்திய மொழிகளில் பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான கல்கி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அமிதாப் தற்போது ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் நடித்துள்ளார்.
1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஹம் படத்தில் அமிதாப் – ரஜினிகாந்த் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்காத நிலையில், தற்போது 33 ஆண்டுகளுக்குப் பிறகு வேட்டையன் படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். இதனிடையே வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் கலந்துகொள்ளவில்லை என்றாலும், அந்த நிகழ்ச்சிக்காக ஒரு சிறப்பு செய்தியை அனுப்பினார்.
இந்த பதிவில், 1991-ம் ஆண்டஹம் படப்பிடிப்பின்போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பேசியிருந்தார். தனது முதல் தமிழ்ப் படம் வேட்டையன் என்பதில் தனக்கு எவ்வளவு பெருமை என்று குறிப்பிட்டு பேச தொடங்கிய அமிதாப், "அனைத்து நட்சத்திரங்களுக்கும் உயர்ந்தவர்" என்று அவர் கூறினார்.
“ஹம் படப்பிடிப்பின் போது நான் ஏசி வாகனத்தில் ஓய்வெடுப்பேன், இடைவேளையின் போது ரஜினி தரையில் தூங்கினார்.
/indian-express-tamil/media/media_files/81Ft5KmFJ8orHktTq5wX.jpg)
அவர் மிகவும் எளிமையாக இருப்பதைப் பார்த்து, நான் வாகனத்திலிருந்து வெளியே வந்து வெளியே அவருடன் சேர்ந்து ஓய்வெடுத்தேன், ”என்று பச்சன் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஹம் தவிர இருவரும் அந்த கானூன் மற்றும் ஜெராப்தார் படங்களிலும் நடித்துள்ளனர். 1990 களில் அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனது நிறுவனத்தைத் தொடங்கினார். அமிதாப் பச்சன். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், நிறுவனம் விரைவில் திவாலாகி பச்சன் குடும்பத்தை நிறைய கடனில் தள்ளியது.
இதன் பின்னர் இந்த கடனில் இருந்து மீண்டு வர போராடிய பச்சனின் முயற்சியை ரஜினிகாந்த் பாராட்டியதால், இருவருக்கும் இடையிலான சகோதரத்துவம் வளர்ந்துள்ளது. வேட்டையன் படத்தை இயக்கியவர் டி.ஜே.ஞானவேல், இவர் கடைசியாக சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற பாராட்டு பெற்ற படத்தை இயக்கியிருந்தார். இதனிடையே அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் வேட்டையன் படத்தில் ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் விஜே ரக்ஷன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“