நடிகர் ரஜினிகாந்த் ஆட்சித் தலைமை வேறு, கட்சித் தலைமை வேறு என்று தனது அரசியல் திட்டம் குறித்து பேசியது தமிழக அரசியலிலும் ஊடகங்களிலும் விவாதமாகியுள்ளது. மேலும், தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை என்றும் ஆனால், தன்னுடைய கருத்துகளை தனது மாவட்ட செயலாளர்கள் ஏற்றுக்கொள்ளதாது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் முதலில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் அதற்கு இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கூறினார். முதலில் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் என்று கூறினார்.
ரஜினியின் கருத்து குறித்து நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி ட்ரோல் செய்து வருகின்றனர். பெரும்பாலும் அதில் ரஜினியின் கருத்துகளை விமர்சனம் செய்யும்படியான மீம்ஸ்களாக உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/rajini-memes1-1-300x229.jpg)
பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்த்தால் இளைஞர்களிடையே எழுச்சி ஏற்பட வேண்டும் என்று வழக்கமாக பேசியதை விமர்சிக்கும் வகையில், வடிவேல் நகைச்சுவையான வரும் ஆனால் வராது என்று மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/rajini-memes2-1-300x300.jpg)
இன்னொரு மீம் சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தில் ரோபோ ஷங்கர் எந்த விஷயத்தைக் கேட்டாலும் தான் காலையில் இருந்து என்ன நடந்தது என்று விவரிக்கும் காட்சியைக் குறிப்பிட்டு ரஜினி ஆரம்பத்திலிருந்து பத்திரிகையாளர்களிடம் பேசுவதாக சித்தரித்து மீம் செய்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/rajini-memes3-1-261x300.jpg)
அதே போல, ரஜினி சிஸ்டம் கெட்டுப்போய் இருக்கிறது. முதலில் சிஸ்டம் சரி செய்ய வேண்டும். சிஸ்டம் சரி செய்யாமல் அரசியலுக்கு வர முடியாது என்று கூறினார். அதற்கு உதாரணமாக, ரஜினி மீன் குழப்பு வைத்த பாத்திரத்தைக் கழுவாமல், அதில் சர்க்கைப் பொங்கல் வைக்கலாமா என்று கூறியதைக் குறிப்பிட்டு முதல்வன் படத்தின் ரகுவரன் கேட்பது போல, இந்த வியாக்கியானம் எல்லாம் வேண்டாம் கட்சி ஆரம்பிப்பியா மாட்டியா? என்று ஒரு மீம் மூலம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/rajini-memes4-1-300x183.jpg)
ரஜினியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பை குறிப்பிட்டு, இன்னைக்கு மார்ச் 12-ம் தேதி என்று ரஜினிக்கு நினைவூட்டும் விதமாக ரஜினியின் தர்பார் படத்தின் ஒரு காட்சியைப் பதிவிட்டு சார் இன்னைக்கு மார்ச் 12 என்று கூறுப்படியாக ஒரு மீம் வெளியாகி உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/rajini-memes5-1-225x300.jpg)
அதே போல, ரஜினி நான் மாற்றத்துக்கான அரசியலுக்கு பாலம் அமைக்கிறேன். நான் அரசியலில் இளைஞர்களுக்கும் நல்லவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறேன். முதல்வர் பதவி ஒரு சிஇஒ பதவி மாதிரி. முதல்வரின் வேலையை சரியாக செய்யாவிட்டால் தூக்கி எறிந்துவிட வேண்டியதுதான் இது ரஜினியின் அரசியல் புரட்சி என்று ரஜினி கருத்துக்கு ஆதரவாக ஒரு மீம் செய்யப்பட்டுள்ளது.
ரஜினியின் இன்றைய பேச்சு ரஜினி அரசியலுக்கு வர தயங்குகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதை விமர்சித்தும் ஒரு மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/rajini-memes-8-1-258x300.jpg)
முதலில் சிஸ்டம் சரி செய்யப்பட வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை விமர்சித்து, புரட்சி வெடித்து சிஸ்டம் சரியான உடனே அரசிலுக்கு வருவேன் என்று வடிவேலு சொல்ல, அதற்கு சுந்தர் சி சரி இதெல்லாம் யார் பண்ணுவா என்று கேட்க, முதல்ல சிஸ்டம் சரி ஆகட்டும்டா அப்புறம் அரசியலுகு வருவேண்டா என்று வடிவேலு என் ஏரியாவுக்கு வந்து பார்ரா என்ற மீம் போட்டு ட்ரோல் செய்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/rajini-memes7-1-300x297.jpg)
ரஜினியின் கருத்து பலருக்கும் அவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதனைக் குறிப்பிடும்படியாக ரஜினி நடித்த் அண்ணாமலைப் படத்தில் ரஜினி, மனோரமா புகைப்படத்தைப் பதிவிட்டு அதில், வரலன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதான அண்ணாமலை... அதுக்கு எதுக்கு எழுச்சி, புரட்சி, திருச்சினு உருட்டிக்கிட்டு இருக்க..” என்று மனோரமா ரஜினியிடம் கேட்கும்விதமாக நெட்டிச்சன்கள் மீம் செய்து ரஜினியை கலாய்த்துள்ளனர்.