விநாயகர் சதுர்த்தி அன்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரும் ட்ரீட்!

அடுத்து வரவிருக்கும் 2.0 மற்றும் பேட்ட படத்தை பெரிதளவில் நம்பி உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , வரும் 13 ஆம் தேதி தனது ரசிகர்களுக்கு  விஷ்வல் ட்ரீட் வைக்கவுள்ளார். அதாவது 2.0 படத்தின்  டீசர் அன்று வெளியாகிறது.

ரஜினிகாந்த்:

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமாரும், ஹீரோயினாக எமி ஜாக்‌ஷனும் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

2.0 டீசர்:

இந்த திரைப்படம் கடந்த வரும் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்பு, முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

பலமுறை ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸாகும் என்று அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானது. சுமார் ரூ. 400 கோடி பொருட்செலவில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள இப்படம் 13 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான காலா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ரஜினியின் ரசிகர்கள் சிலருக்கு இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அடுத்து வரவிருக்கும் 2.0 மற்றும் பேட்ட படத்தை பெரிதளவில் நம்பி உள்ளனர்.

இந்நிலையில் 2.0 படத்தின் டீசர் வரும் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்து இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close