சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த வாரம் வெளியானது. தற்போது 10 நாள்கள் கடந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட ரூ.500 கோடியை இதுவரை வசூலித்துள்ளது.
அந்த வகையில் ஜெயிலர் 53.79 சதவீதம் தமிழ் சந்தையையும், 46.73 தெலுங்கு சந்தையையும் பிடித்துள்ளது.
தொடர்ந்து கதார்2 மற்றும் ஓஎம்ஜி2 உள்ளிட்ட படங்கள் உள்ளன. ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்த தமிழ் படங்களில், 2.0 மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
இந்த நிலையில் மூன்றாம் இடத்தில் ஜெயிலர் உள்ளது. மேலும் ஒரே வாரத்தில் அதிக வசூலை அள்ளிய 2வது படம் என்ற சாதனையையும் ஜெயிலர் தட்டிச் சென்று்ளளது. இதில் முதலிடத்தில் பொன்னியின் செல்வன் உள்ளது.
ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, பிரியங்கா மோகன், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படம் கமல்ஹாசனின் புதிய விக்ரம் படத்தின் கதைப்போல் ஒரே ஜார்னரில் உள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துவருகின்றனர்.
தற்போது ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுலாவில் உள்ளார். அவர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“