காலா ரீலீஸ் தேதி அறிவிப்பு.. டிவிட்டரில் ட்ரெண்டான #Kaala

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காலா வரும் ஜீன் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ’காலா’ திரைப்படம் வரும்  ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்நிலையில், ட்விட்டர் வலைப்பக்கத்தில்  ட்ரெண்ட் அடித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கியுள்ள  காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான காலா டீசர் பட்டித் தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய நிலையில், தற்போது படத்தின் ரீலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

47 நாட்களாக எந்த புது படங்களும் வராத நிலையில் நேற்று(21.4.18) முதல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக புது படங்கள் வர ஆரம்பித்துள்ளன.  இந்நிலையில், காலா படத்தின் தயாரிப்பாளரும், ரஜினிகாந்தின் மருமகனான நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் காலா படத்தின் ரீலீஸ் தேதி குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால் ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் சினிமா ஸ்டிரைக், காவிரி விவகாரம் என பல்வேறு காரணங்களால் காலா ரீலீஸ்  தேதியும் தள்ளி போகியது.இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காலா வரும் ஜீன் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

காலா’படத்தைப் பார்த்த தணிக்கை வாரிய அதிகாரிகள், 14 இடங்களில் படத்தை வெட்டச் சொல்லி‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்தனர். ‘காலா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அவரை தவிர, இந்த படத்தில், சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

×Close
×Close