Petta Single Track Marana Mass release : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் முதல் சிங்கிள் டிராக் மரண மாஸ் இன்று ரிலீஸ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு ரஜினிக்கு சிம்ரன் ஜோடியாகவும், மற்றொரு ரஜினிக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்.
Petta Single Track Marana Mass release : மரண மாஸ் பாடல் ரிலீஸ்
கடந்த மாதம் வெளியான 2.0 படம் வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுவரை 3 போஸ்டர்களை வெளியிட்டுள்ள பேட்ட குழுவினர், இன்று இப்படத்தின் மரண மாஸ் என்ற முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
#MaranaMass from Today at 6 pm!
How excited are you? pic.twitter.com/m1LUaryH8N— Sun Pictures (@sunpictures) 3 December 2018
இந்நிலையில், இப்பாடல் உருவான விதத்தையும் வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
A sneak peek into the #MakingOfMaranaMass ! Get ready for #ThalaivarKuththu Today at 6pm!@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @Nawazuddin_S @SasikumarDir @trishtrashers @Lyricist_Vivek pic.twitter.com/TrTIPh2rhR
— Sun Pictures (@sunpictures) 3 December 2018
இப்பாடலை #தலைவர் குத்து என்றும் புரொமோட் செய்து வருகின்றனர். ரஜினி ரசிகர்கள் அனைவரும் மரண மாஸ் பாடலுக்காக மரண வெயிட்டிங்கில் உள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு இப்பாடலை இணையத்தில் வெளியிடுகிறது படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ்.
அறிவித்தபடி செம மாஸாக மாலை 6 மணிக்கு பாடலின் சிங்கிள் டிராக் வீடியோ வை வெளியிட்டனர். ரசிகர்கள் மத்தியில் அந்தப் பாடல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.