ரஜினிகாந்தை, முதலில் பார்த்தபோது அவரிடம் என்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்று நினைத்தேனோ அந்த கேள்விகளை மறந்துவிட்டார் லதா. ரஜினிக்கும் அவரை பிடித்திருந்தது. சினிமாவிற்கு வந்த சில வாரங்களிலேயே, ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற இடம் கிடைத்தது. அப்போது, வளர்ந்து வந்த நடிகையின் தங்கைக்கும் அவருக்கும் காதல் இருப்பதாக அவரை ரஜினி திருணம் செய்து கொள்வதாக பேசப்பட்டது. ஆனால் ரஜினி இதை மறுத்தார். ஒரு பெண்ணை தன்னோடு தொடர்புபடுத்தி பேசுவது அந்த பெண்ணுக்கு சிக்கலை கொடுக்கும் என்று ரஜினி கூறினார். ரஜினியை சந்தித்த லதா நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டபோது, குடும்ப பாங்கான பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
அப்படி என்றால் புரியவில்லை என்று கேட்டபோது. உங்களைப்போன்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இதை ஒய்.ஜி.மகேந்திரனிடம் சொன்னபோது. இது அவரது குடும்பம் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்று சொல்லிவிட்டார். லாதா அவர்களின் குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டது. எதிர்பாரதவிதமாக ரஜினியின் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ரஜினி ஒன்று ஆசைப்பட்டால் அதை அடையாமல் விடமாட்டார் என்பதால் அவர் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ரஜினி, இயக்குநர் பாலச்சந்திரனிடம், லதாவை அறிமுகம் செய்யும்போது, பெண்ணின் வீட்டில் சொல்லிட்டீங்களா என்று கேட்டபோது. அனுமதி பெற்றுவிட்டோம் என்று லதா பதில் சொல்லி உள்ளார். அப்போது, ரஜினி கோவக்காரன் நீதான் பார்த்து நடந்துகணும் என்று சொன்னபோது, ரஜினி வெட்கத்தில் சிரித்தார்.
இந்த காதலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார் ரஜினி. மேலும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக, பத்திரிக்கையாளரை அழைத்து. திருப்பதியில் திருமணம் வைத்திருப்பதாகவும். அங்கு யாரும் வர வேண்டாம். புகைப்படங்களை தானே தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை மீறி வந்தால் என்ன செய்வீர்கள் என்று பத்திக்கையாளர் ஒருவர் கேட்டபோது, உதைப்பேன் என்று கூறியுள்ளார் ரஜினி. அவரின் எதிர்ப்பை மீறியும் சில பத்திக்கையாளர்கள், திருப்பதி சென்றனர்.
இதைத்தொடர்ந்து சென்னையில் நடந்த வரவேற்று நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டது. திருமணத்திற்கு பிறகு, அவர் இலங்கையில் படபிடிக்கு சென்றபோது, கருப்பு, கிரே நிறத்தில் உள்ள புடவை, முத்து மாலையை வாங்கி கொடுத்துள்ளார். அதிக படங்கள் நடித்து வந்ததால், அவர்களால் தேன் நிலவு செல்ல முடியவில்லை. வெறும் 3 நாட்கள் மட்டும் சிங்கப்பூர் சென்றுவந்தார்கள். ஆனால் அங்கும் ரசிகர்கள் அதிகம் இருந்ததால் வெளியே வர முடியவில்லை. ஊர்க்காவலன் படத்தில் இட்லி ஊட்டிவிடும் சீன்தான் எனக்கு பிடித்த காட்சி என்று ராதிகா கூறியுள்ளார். எல்லா கதாநாயகிகளிடமும் அவர் சேர்ந்து நடித்துள்ளார். ஸ்ரீரிப்பிரியாதான் அவருடன் அதிக படங்களில் நடித்துள்ளார். எத்தனை படங்களில் நடித்தோம் என்றுகூட கணக்கில் இல்லை என்று ஸ்ரீப்பிரியா கூறியுள்ளார். ஒரு காலகட்டத்தில் ரஜினி மனம் உடைந்த போது, நேரில் சென்று மன ஆறுதல் சொல்லி துணையாக இருந்துள்ளார் ஸ்ரீப்பிரியா, அவருக்காக பாலச்சந்திரனிடம் சென்று ரஜினியை மீட்டு எடுக்க உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து குஷ்பூவுடன் நடிக்கும்போது, அவர் மிகவும் அன்பாக இருப்பார் என்று நடிகை குஷ்பூவே கூறியுள்ளார். அண்ணாமலை படத்தில் குஷ்பூ வயதான தோற்றத்தில் வந்தபோது, ரஜினி அவரையே பார்த்துகொண்டிருந்தார். அப்போது, உங்களை திருமணம் செய்து கொள்பவர் கொடுத்து வைத்தவர். நீங்கள் வயதானாலும் அழகாக இருப்பீர்கள் என்று பாராட்டியதாக கூறியுள்ளார். ரஜினியுடன் எல்லா காட்சிகளிலும் நடிக்கலாம். ஆனால் நகைச்சுவை காட்சியில் நடிப்பது கஷ்டம், அவர் அசத்திவிடுவார். என்னால் அவர் அளவிற்கு நடிக்க முடியாது என்பதுதான் வருத்தம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“