/tamil-ie/media/media_files/uploads/2020/05/template-2020-05-22T160613.787.jpg)
rajinikanth, super star rajinikanth, k balachander, drinking habit, video, rajinikanth fans, viral, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
இனிமே குடிச்சிட்டு ஷூட்டிங் வர்றது தெரிஞ்சிச்சுன்னா செருப்பாலேயே அடிப்பேன் என்று பாலசந்தர் சொன்னதாக ரஜினி கூறிஉள்ள வீடியோ, தற்போது ரஜினி ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று அப்போ பாடின பாட்டுக்கு இப்போதும் அது போன்று தனித்தன்மையுடன் இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடித்து சமீபகாலமாக வெளிவந்த படங்கள், தோல்வியை சந்திந்திருந்த போதிலும், அவரது படத்திற்கு வரும் மக்களின் கூட்டம் எப்போதும் குறைந்ததில்லை. அவரது ஸ்டைலுக்கு என்று எப்போதும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் வீடியோ கால் மூலம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஒரு முறை நான் தண்ணி சாப்பிட்டு இருந்தேன்.திடீரென்று ஒரு காட்சி எடுக்க வேண்டும் வாங்க என்று ஃபோன் பண்ணினார்கள். நான் உடனே பிரஸ் பண்ணி, குளித்துவிட்டு ஸ்பிரே அடித்துக் கொண்டு, மேக்கப் எல்லாம் ஸ்பிரே கொண்டு போனேன். பாலசந்தர் சார் கிட்ட போக கூடாது என்று முயற்சி பண்ணி நின்றேன். இருந்தாலும் அவர் கண்டுபிடித்து விட்டார். உடனே அவர் என்னை உள்ளே வா என்று கூப்பிட்டார். அப்படியே எனக்கு ஆடி போய் விட்டது. உனக்கு நாசர் தெரியுமா என்று கேட்டார். அவர் எப்படிப்பட்ட ஆர்டிஸ்ட்.
அவர் முன்னாடி நீ எல்லாம் ஒரு எறும்புக்கு கூட சமமில்லை. தண்ணி போட்டு அவர் வாழ்க்கை வேஸ்ட் பண்ணிட்டார். இனிமேல் ஷூட்டிங்கில் தண்ணி போட்டேன் என்று இனிமேல் கேள்விப்பட்டேன் செருப்பாலே அடிப்பேன் என்று சொன்னார். நான் தண்ணி அடிக்கும் பழக்கத்தை அன்று விட்டவன். எந்த குளிர்பிரதேசத்துக்கு போனால் கூட நான் ஒரு சொட்டு தண்ணீர் கூட சாப்பிடுவது இல்லை என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
ரஜினிகாந்த், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் "அண்ணாத்தே" படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2021 பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலான இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.