Advertisment

ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் : ரஜினியின் அடுத்த ஹீரோயின் இவர் தான்!

Superstar Rajinikanth: அடுத்த மாதம் ரஜினிகாந்த் தனது 168-வது திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thalaivar 168, rajinikanth

ரஜினிகாந்த்

Thalaivar 168 Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது ’தர்பார்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்திற்கான டப்பிங் பணிகளையும் நிறைவு செய்தார் ரஜினி. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். படம் 2020 பொங்கலுக்கு வெளியாகிறது.

Advertisment

இந்நிலையில், அடுத்த மாதம் சூப்பர் ஸ்டார் தனது 168-வது திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார். இயக்குநர் சிவா இயக்கும், இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில், சூரி நகைச்சுவை நடிகராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே தலைவர் 168-ல் ஜோதிகா, மஞ்சு வாரியர், அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகியோரில் ஒருவர் ஹீரோயினாக நடிக்கலாம் என்ற செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் சமீபத்திய தகவலின் படி, முன்னாள் ஹீரோயின்களான குஷ்பு அல்லது மீனா ஆகிய இருவரில், ஒருவர் தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பார் என்று தெரிகிறது. இன்னொரு அண்ணாமலையா, அல்லது இன்னொரு முத்துவா என பொறுத்திருந்து பார்ப்போம்!

Rajinikanth Sun Pictures
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment