/indian-express-tamil/media/media_files/zMYFVwtOhgcWAQTsI5IY.jpg)
நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
Rajinikanth | 'Thalaivar 171' | Lokesh Kanagaraj | Sun Pictures: இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழு அண்மையில் அறிவித்தது. மேலும், 'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன், அனிருத் உள்ளிட்ட ஜெயிலர் படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் 'சன் பிக்சர்ஸ்' கலாநிதி மாறன் பரிசும், விருந்தும் வழங்கினார்.
மீண்டும் சன் பிக்சர்ஸ் படத்தில் ரஜினி
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 171-வது படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸ் X தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால் சமூக வலைதளத்தில் #LokeshKanagaraj, #Thalaivar171, #SunPictures டேக்குகள் ட்ரெண்டில் உள்ளது.
We are happy to announce Superstar @rajinikanth’s #Thalaivar171
— Sun Pictures (@sunpictures) September 11, 2023
Written & Directed by @Dir_Lokesh
An @anirudhofficial musical
Action by @anbarivpic.twitter.com/fNGCUZq1xi
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.