Rajinikanth heads to the Himalayas Tamil News: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜெயிலர் ரிலீஸ்
இந்த படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல், படத்தின் டிரைலரும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இப்படம் நாளை வியாழக்கிழமை (10-ம் தேதி) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
இமயமலை பயணம்
பொதுவாக, நடிகர் ரஜினி, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ம் ஆண்டில் 'காலா', '2.0' படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்து வந்தார்.
தற்போது 'ஜெயிலர்' படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், நடிகர் ரஜினி இன்று இமயமலை புறப்பட்டார். போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் அங்கிருந்து இமயமலை செல்கிறார்.
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 'கொரோனா காரணமாக இமயமலை செல்ல முடியாமல் இருந்தது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் இமயமலைக்கு செல்கிறேன்' என்றார். ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது? படத்தில் நடித்ததில் உங்கள் அனுபவம் எப்படி உள்ளது? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினி, படத்தை நீங்கள் பார்த்துவிட்டு கூறுங்கள்' என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.