Advertisment

நீச்சல் உடையில் ரஜினியின் வேட்டையன் பட நடிகை; புத்தாண்டு கொண்டாட்ட வைரல் போட்டோஸ்

கடற்கரையில் நீச்சல் உடையில் வலம் வரும் ரஜினியின் வேட்டையன் பட நடிகை துஷாரா விஜயன்; இணையத்தில் வைரலாகும் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

author-image
WebDesk
New Update
dushara vijayan

கடற்கரையில் நீச்சல் உடையில் வலம் வரும் ரஜினியின் வேட்டையன் பட நடிகை துஷாரா விஜயன்; இணையத்தில் வைரலாகும் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை துஷாரா விஜயன், நீச்சல் உடையில் பீச்சில் புத்தாண்டை கொண்டாடிய லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisment

2019 ஆம் ஆண்டு வெளியான ’போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் துஷாரா விஜயன். பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து போல்டான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வரும் துஷாரா விஜயன், அநீதி, கழுவேத்தி மூர்க்கன், நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் நடித்து வரும் வேட்டையன் படத்திலும் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை தீவு ஒன்றில் கொண்டாடிய துஷாரா விஜயன், கடற்கரையில் பச்சை நிற நீச்சல் உடையில் அழகாக நடந்து செல்லும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் துஷாரா விஜயனின் அழகை வர்ணித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment