Advertisment

வேட்டையன் ‘மனசிலாயோ’ பாடல் வெற்றிக்கு காரணம் இவங்கதான்; மனம் விட்டுப் பாராட்டிய ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ஃபஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Rajinikanth Vettaiyan

ரஜினிகாந்த் வேட்டையன் படம் குறித்து “மனசிலாயோ” பாடல் உட்பட சில விஷயங்களைப் பேசினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில், வில்லன் விநாயகம் சொன்ன ஒரு எளிய வார்த்தை, ரஜினியின் வேட்டையன் படத்தில் பாடலாக மாறி வைரலாகி ட்ரெண்டிங்காக மாறும் என்று யார் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இயகுனர் த.செ. ஞானவேலின் வரவிருக்கும் ரஜினிகாந்த் நடித்த வேட்டையனில் இருந்து அனிருத் ரவிச்சந்தரின் “மனசிலாயோ” பாடல் அப்படி ஒரு வெறித்தனமாக கொண்டாட்டத்தை நிகழ்த்தியுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட வேட்டையன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், இந்தப் பாடலை மையமாக வைத்து, மேடையில் எப்போது பாடல் ஒலித்தாலும் ஆரவாரமான கூட்டம் அலைமோதியது. வெற்றிகரமாக நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சன் நியூஸுடனான உரையாடலில், ரஜினிகாந்த் வேட்டையன் படம் குறித்து “மனசிலாயோ” பாடல் உட்பட சில விஷயங்களைப் பேசினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Rajinikanth addresses issue of fake passes for Vettaiyan Chennai event, says ‘Dinesh Master’s simple steps’ is a reason for Manasilaayo becoming viral

“மனசிலாயோ பாடலின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் ஒரு காரணம். ஆனால், நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டரின் எளிமையான மற்றும் கவர்ச்சியான ஸ்டெப்ஸ் மிகவும் முக்கியமானவை. மேலும், பாடலாசிரியர்களான சூப்பர் சுபு, விஷ்ணு எடவன், பாடகர்கள் தீப்தி சுரேஷ், அனிருத், யுகேந்திரன் ஆகியோருக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்று கூறிய ரஜினிகாந்த், படம் நன்றாக வந்துள்ளது. ஆனால், பார்வையாளர்கள்தான் சிறந்த நீதிபதியாக இருப்பார்கள் என்று கூறினார்.

இந்த நிகழ்வு அமோக வெற்றி பெற்றாலும், ஏற்பாட்டாளர்களால் பகிரப்பட்ட பாஸ்கள் தொடர்பாக சில மோதல்கள் ஏற்பட்டன. நிகழ்ச்சிக்கான உண்மையான பாஸ் இருந்தும் அந்த வளாகத்திற்குள் நுழைய முடியாத நிலையில், நிறைய பேர் போலி பாஸ் மூலம் நிகழ்ச்சிக்கு உள்ளே நுழைந்ததாக பலர் குற்றம் சாட்டினர். இது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய ரஜினிகாந்த், “ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், ஆனால் நிகழ்ச்சி பாஸ் தொடர்பாக சில சிக்கல்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். நிர்வாகம் விஷயங்களைச் சரிசெய்து, எதிர்கால நிகழ்வுகளில் இது நடக்காமல் பார்த்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

ஆடியோ வெளியீட்டு விழாவில், லைகா புரொடக்ஷன்ஸின் நிர்வாக தயாரிப்பாளர் ஜி.கே.எம் தமிழ்குமரனை சூப்பர் ஸ்டார் புகழ்ந்தார். “இந்த படத்தில் பல பெரிய கலைஞர்கள் இருக்கிறார்கள், நிர்வாகத் தயாரிப்பாளர் தமிழ்குமரன் அனைத்தையும் மிகச் சிறப்பாகக் கையாண்டார். இயக்குனர் கேட்டுக்கொண்டபடி பல இடங்களை அவர் கையாண்டார், பல பிஸியான நட்சத்திரங்களின் தேதிகளை சரியாக நிர்வகித்தார். அவருக்கு ஜஸ்ட் ஹேட்ஸ் ஆஃப்” ​​என்று ரஜினிகாந்த் கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ஃபஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ள வேட்டையன் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. வேட்டையன் படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கூலி படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment