இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் புதிதாக இணைந்துள்ளார் விஜய் சேதுபதி.
தமிழ் திரையுலகில் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி மற்றும் மெர்குரி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தின் இயக்கத்தில் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிப்பார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட செய்தி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/karthik-with-rajini-300x169.jpg)
நடிகர் ரஜினிகாந்த் இதுவரை நடித்துள்ள காலா மற்றும் 2.0 படங்கள் வெளிவர உள்ளது. இவர் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள '2.0', படமும் விரைவில் வெளியிடத் தயாராக உள்ளது.
இந்த இரண்டு படைப்புகளுக்கு காத்திருக்கும் ரஜினியின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை கார்த்திக் சுப்புராஜ் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மேலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
,
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி. சமீபத்தில் விக்ரம் வேதா படத்தில் வில்லன் கெட் அப்பில் அசத்திய இவர், இந்தப் படத்திலும் வில்லனாக நடிப்பார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை “சன் பிக்சர்ஸ்” தயாரிக்கும் எனவும், அனிருத் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை பெயர் எதுவும் சூட்டப்படாத நிலையிலும், இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.