தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்த விஜயகாந்த் கடந்த டிசம்பரில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்மபூஷன் வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
இந்நிலையில் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது.
விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த்” இவ்வாறு ரஜினிகாந்த அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“