Advertisment

உங்கள் தூக்கத்தை கெடுத்துடேன் மன்னிச்சிடுங்க... ரசிகர் வீட்டுக்கு ரஜினிகாந்த் திடீர் விசிட்

விடுமுறைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த், காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது வீட்டில் இருந்து தன்னை நோக்கி கை அசைத்துக்கொண்டிருந்த ரசிகரின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rajinikanth Fans

நடிகர் ரஜினிகாந்த்

ஆங்கிலத்தில் படிக்க : ‘Sorry I spoiled your sleep’: Rajinikanth visits fan’s house unannounced in US, throwback video goes viral

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த் எங்கு சென்றாலும் பாதுகாப்புடன் சென்று வந்தாலும், சில சமயங்களில் அவர் பாதுகாவலர்கள் இல்லாதபோது தனது சில வெளிப்படையான சைகைகள் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவர். அதேபோல் பல சந்தர்ப்பங்களில், பாதுகாப்பு காவலர்கள் இல்லாமல் தனது வீட்டிற்கு அருகில் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வதைக் காணலாம்.

மேலும் சில சமயங்களில் மாறுவேடத்தில் ஊரில் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கும் போது அவர் ஒரு சாதாரன நபர் போலவே இருப்பார். இதற்கு முக்கிய உதாரணமாக தற்போது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் நடிகர் ரஜினிகாந்தின் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் ரஜினிகாந்த் ஒரு தமிழ் குடும்பத்தின் வீட்டிற்கு நடந்து செல்கிறார். அங்கிருப்பவர்கள் ரஜினிகாந்தை பார்த்தவுடன் கையசைக்கின்றனர்.  திடீரென்று, அவர் அவர்களின் வீட்டிற்குச் செல்ல தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்கிறது. தொடர்ந்து அவரை உள்ளே அழைத்ததும் மன்னிக்கவும் உங்கள் தூக்கத்தை கெடுக்கிறேன்?” என்று கூறும் ரஜினிகாந்த், நிச்சயமாக, எல்லாம் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்.

அவர் வீட்டிற்குள் நுழைய, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அந்த குடும்பத்தில் உள்ள ஒரு நபர் ரஜினிகாந்த் வந்ததை நம்பாமல், படிக்கட்டுகளில் இறங்குவதைக் காணலாம். மற்றொரு உறுப்பினர் அவரை தொடர்ந்து நடிக்கும்படி கேட்கிறார். ரஜினிகாந்த் இப்படி ஒரு திடீர் பயணத்தை எடுப்பது இது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன்பு, அவர் ஒருமுறை நடத்துனராகப் பணியாற்றிய பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்றார்.

அங்கு டிப்போ ஊழியர்கள் அனைவரும் ரஜினிகாந்தை தங்கள் பணியிடத்தில் பார்க்க உற்சாகமடைந்தனர். அவர் வீடு திரும்புவதற்கு முன் சிறிது நேரம் மகிழ்ந்தார். ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன், ஃபஹத், பாசில், ராணா டக்பதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரும் நடித்துள்ள இப்படம் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் திரையரங்குகளில் வெளியாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment