New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/09/New-Project-2020-09-06T175516.912.jpg)
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் தெருவில் அவருக்கே உரிய வேகத்துடன் ஸ்டைலாக போயஸ் கார்டனில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி, வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று தமிழக அரசியலில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பாஜகவினர் ரஜினி விருப்பப்பட்டால் கூட்டணி வைப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தனது வேகமான நடை, ஸ்டைல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். தற்போது 70 வயது ஆகும் ரஜினிகாந்த் சினிமாவில் இன்னும் அதே வேகம், ஸ்டைல் உடன் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். ரஜினியிடம் உள்ள வேகம் அவருடைய பெரிய பலம் என்று அவரது நெருங்கிப் பழகியபலரும் கூறுவது உண்டு.
ரஜினியின் வேகம் என்பது சினிமாவில் நடிப்பு மட்டுமல்ல அவருடைய நிஜயமான இயல்பே வேகம்தான் என்பதை காட்டும் படியாக, ரஜினி போயஸ் கார்டன் தெருவில் வேகமாக ஸ்டைலாக நடை பயிற்சி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
SUPERSTAR WALKING ????????????????#STYLEMAN pic.twitter.com/gyiv9F9Ph0
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) September 5, 2020
இந்த வீடியோவில், அதிகாலையில், யாரும் இல்லாத ஆளில்லாத போயஸ் கார்டன் தெருவில், வேகமாக ஸ்டைலாக நடந்து செல்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோவுக்கு ரஜினி ரசிகர்கள் சிலர், சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்ற அருணாச்சலம் படம் பாடலையும், படையப்பா படத்தில் சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு என்ற பாடலையும் பின்னணி சேர்க்க அந்தப் பாடல் சமூக ஊடகங்களில் தீயாக பற்றிக்கொண்டு வைரலானது. இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் அட! ரஜினியா இது, என்ன ஒரு வேகம் ஸ்டைல் என்று வியந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.