/indian-express-tamil/media/media_files/F0lhcSSdta4KpZrgFx1M.jpg)
ரஜினிகாந்த் மற்றும் லதா திருமணம் செய்து 43 ஆண்டுகள் நிறைவடைந்தது
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – அவரது மனைவி லதா ஆகியோர் தங்களது 43-வது திருமண நாளை கொண்டாடிய நிலையில், இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரஜினிகாந்த், 70 வயதை கடந்த நிலையிலும், தற்போதுவரை படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், நேற்று (பிப்ரவரி 26) தனது மனைவி லதாவுடன் இணைந்து 43-வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அவர்களின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், “43 வருட ஒற்றுமை. என் செல்லம் அம்மா & அப்பா !!!! எப்பொழுதும் ஒருவருக்கொருவர் வலிமையாக நிற்கிறது. 43 வருடங்களுக்கு முன்பு தாங்கள் மாற்றிக் கொண்ட செயின் மற்றும் மோதிரங்களை அம்மா ஆண்டுதோறும் அப்பாவுக்கு அன்புடன் அணிவித்து அணிவிக்கிறார்!!!!! உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறேன் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் லதா நிறைந்த புன்னகையுடன் உள்ளனர். இருவரும் 43 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றிக் கொண்ட தங்கச் சங்கிலிகள் மற்றும் மோதிரங்களையும் பெருமையுடன் காட்சிப்படுத்தினர். 1980-ம் ஆண்டு மாணவியான லதா, தில்லு முல்லு (1980) படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தை ஒரு நேர்காணலுக்காக சந்தித்தார். இந்த நேர்காணலின் முடிவில் ரஜினிகாந்த் தனது காதலை வெளிப்படுத்தினார். லதாவும் புன்னகையுடன் ஏற்றக்கொண்டார்.
43 years of togetherness 🥰❤️🥰❤️🥰my darling amma & appa !!!! .. always standing by each other rock solid 💜🥰😘😘😘 amma cherishes and makes appa wear the chain and rings they exchanged 43 years ago, every year 😊🥹❤️ !!!!! Love you both too much and more 🩷❤️🧡#CoupleGoalspic.twitter.com/NyLEtZcovI
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 27, 2024
அதன்பிறகு ரஜினிகாந்த், தனது பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 1981 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் ரஜினிகாந்த் மற்றும் லதா. அவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் படத்தை இயக்கினார்.
சௌந்தர்யா இதற்கு முன் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை தயாரித்துள்ளார். பல ஆண்டுகளாக, லதா பாடகி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோராக வலம் வருகிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பிய கோடிக்கணக்கான ரசிகர்களில் அவரும் ஒருவர். சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.