scorecardresearch

ரசிகர் அளித்த பரிசை தவறவிடாமல் எடுத்துச் சென்ற ரஜினி; ரசிகர்கள் நெகிழ்ச்சி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது ரசிகர் அணிவித்த பொன்னாடையை ரஜினி அக்கறையுடன் ஞாபகார்த்தமாக எடுத்துச் சென்றார்.

Rajinikanth is acting in two films after Jailer

விமான நிலையத்தில் ரசிகர் அளித்த அன்பளிப்பை நடிகர் ரஜினி தவறவிடாமல் எடுத்துச் சென்றது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி, தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60% அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பிற்காக கடந்த 7 ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்ட ரஜினி படப்பிடிப்பில் இருந்து இன்று சென்னை திரும்பினார். அங்கு மோகன்லாலுக்கும் அவருக்குமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார். அப்போது ரசிகர்கள் அவருக்கு பொன்னாடைகள் போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது ரஜினி ரசிகர் ஒருவர் அணிவித்த பொன்னாடை அவர் கையில் இருந்து நழுவி சென்றது. ஆனால் விட்டுவிடாமல் ரஜினி அக்கறையுடன் பொன்னாடையை ஞாபகார்த்தமாக எடுத்துச் சென்றார். இந்த சம்பவம் அந்த ரசிகரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rajinikanth wish pongal and took fans gift without forget at chennai airport

Best of Express