’உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மற்றும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’லால் சலாம்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உடன் ரஜினியும் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏர்.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற பெயர் உள்ள கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று இப்படம் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “ என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“