அந்தரா சக்கரவர்த்தி
Rajinikanth's 2.0 Review: உலகம் முழுவதும் இன்று வெளியான 2.0 படம் ரஜினி ரசிகர்களுக்கு பக்கா மாஸாக அமைந்துள்ளது. ரசிகர்கள் காட்டில் பெரும் மழை தான்.
நிமிடத்திற்கு நிமிடம் 2.0 திரைப்படம் சுத்தமான ரஜினி படம், தரமான சங்கர் படம்... எந்திரன் பாகம் 2 போல் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், எந்திரன் படத்தையும் மிஞ்சிய பிரம்மாண்டத்தை கொண்டுள்ளது.
2.0 Movie Review : 2.0 படம் விமர்சனம்
எந்திரன் படத்தில் வரும் அதே விஞ்ஞானி டாக்டர் வசீகரன், இப்படத்திலும் ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானியாக அறிமுகமாகிறார். அவரது அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி கூடம் முழுவதும் இயந்திரங்கள் மற்றும் ரோபோக்களாலேயே நிறம்பியுள்ளது. பின்னர் அரசு உயர் அதிகாரிகளுடன் எதிர்கால விஞ்ஞானம் மற்றும் அறிவியல் சார்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
அவரை தொடர்ந்து, ரசிகர்கள் எதிர்பார்க்கும் சிட்டி ரோபோ எண்ட்ரி. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ரசிகர்களே என்பது போல் சிட்டியின் அறிமுகம் தியேட்டர் முழுவதும் விசில் பறக்க அரங்கத்தையே அதிரவைக்கிறது. மனிதர்களின் உணர்வுகளை தானும் கொண்டுள்ள சிட்டி சற்று பலவீனம் என்பது போல் தோன்றுகிறது. இதன் விளைவாக முதல் பாகத்தில் என்ன ஆயிற்று என்று நாம் பார்த்தோமே. ஆனால் உங்கள் அனைவர் மனதிலும் நீங்காமல் நினைவிருப்பது அந்த வில்லன் சிட்டி தானே. அதே சிட்டி இந்த முறையும் அதகளப்படுத்திகிறார்.
தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த ஊழல்... என்று ஊழலுக்கு எதிராக இருக்கும் ஒரு உத்தமர் தான் டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி. இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரஜினி மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் பெருமையை அளித்திருக்கிறது. ரஜினியின் நடை, உடை பாவம் அனைத்தையும் பார்த்து படம் முழுவதும் ரசிகர்கள் விசில் அடித்து கரகோஷம் எழுப்புவதில் இருந்தே இதை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.
படையப்பா படத்திற்கு பிறகு ரஜினியின் ஸ்டைல் எங்கே போச்சு என்று கேட்பவர்களுக்கு, “கூடவே பிறந்தது... என்னிக்கும் போகாது” என்று 2.0 படத்தில் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவிலேயே இதுவரை வெளியான் படங்களில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட் படம் என்ற பெருமையை இது கொண்டுள்ளது. அந்த காரணத்தினாலேயே, கிராஃபிக்ஸ் மீதான எதிர்பார்ப்பும் அனைவரிடம் அதிகரித்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்திருக்கிறது சங்கரின் பிரம்மாண்ட 2.0
குறிப்பாக ஒரு அறை முழுவதும் செல்போன்களாலேயே நிரம்பி வழிந்து அக்ஷய் தோன்றும் காட்சியெல்லாம் 3டி உலகிற்குள் அனைவரையும் அழைத்துச் செல்கிறது. கதையின் கருவில் முக்கிய கருத்து பெரிதாக புலன்படவில்லை என்றாலும், கிராஃபிக்ஸ் காட்சிகளின் உருவாக்கத்தின் உழைப்பு சங்கருக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது