Advertisment

'2.0' படத்தின் டீசர் சமூக தளங்களில் லீக்!

ரஜினிகாந்தின் 2.0 பட டீசர் சமூக தளங்களில் லீக் ஆகியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'2.0' படத்தின் டீசர் சமூக தளங்களில் லீக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தின் டீசர் திருட்டுத் தனமாக இணையதளங்களில் தற்போது லீக் ஆகி உள்ளது. இதனால், படக்குழு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் முடியாததால், ஏப்ரல் மாதத்துக்கு ரிலீஸ் தள்ளிப்போனது.

‘2.0’ படத்தின் டீஸர் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். சமீபத்தில் குடியரசு தின வாழ்த்துசொன்ன ஷங்கர், விரைவில் டீஸர் வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதன்படி, பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் டீஸர் ரிலீஸாகும் என கூறப்பட்டது

‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்திய லைகா நிறுவனம், டீஸர் ரிலீஸை ஹைதராபாத்தில் நடத்த முடிவு செய்திருந்தது. இந்த விழாவுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, மலையாள முன்னணி நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லாலை அழைக்கவும் லைகா நிறுவனம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், 2.0 படத்தின் டீசர் இணையதளங்களில் திருட்டுத் தனமாக லீக் செய்யப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் 26 நொடிகள் ஓடக் கூடிய அந்த வீடியோ, மிக வேகமாக சமூக தளங்களில் பரவி வருகிறது. அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே, படத்தின் டீசர் லீக் ஆகி இருப்பதால், 2.0 படக் கூட்டணியே கடும் அதிர்ச்சியில் உள்ளது.

இதேபோல் காலா படத்தின் டீசரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment