scorecardresearch

அண்ணாத்தே தீபாவளி… தியேட்டர்ல திருவிழா… இனி கல்யாண வீடுகளில் இந்த பாடல்தான்!

இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி என்றும் தியேட்டர்ல திருவிழாதான், இனி கல்யாண வீட்டில் இந்த பாடல்தான் ஒலிக்கும் என்று மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Rajinikanth, Annaatthe movie, Annaatthe movie Marudhani song, fans celebrations, ரஜினிகாந்த், அண்ணாத்தே தீபாவளி, தியேட்டர்ல திருவிழா, இனி கல்யாண வீடுகளில் மருதாணி பாடல் ஒலிக்கும், Annaatthe marudhani song, marriage function song marudhani, annaatthe, nayanthara, keerthy suresh, meena, kushbhu

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்தே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மருதாணி பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருதாணி பாடலைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் இந்த தீபாவளி அண்ணாத்தே தீபாவளிதான், அதோடு இனிமேல் கல்யாண வீட்டுல இந்த பாடல்தான் ஒலிக்கும் என்று கூறி வருகின்றனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் எப்போதும் இடம்பெறும் ஒரு பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் படத்தில் இடம்பெற்ற ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான் பேரு விளங்க இங்கே வாழணும்” என்ற பாடல் கட்டாயம் ஒலிக்கும். அப்படி ரஜினி நடிப்பில் இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ள அண்ணாத்தே படத்தில் இடம்பெற்ற மருதாணி பாடல் நிச்சயம் ஒலிக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கெனவே, அண்ணாத்தே படத்தின் 2 டீசர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், அண்ணாத்தே படத்தில் இடம்பெற்று ள்ள மருதாணி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் குறித்து வெளியான போஸ்டரில் மீனாவும், குஷ்புவும் ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடுவது போல் காட்டப்படுகிறது.

அண்ணாத்தே படத்தின் மருதாணி பாடல் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், இந்த பாடல் திருமண நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடலாக அமைந்திருப்பதால் இந்த பாடல், இனி கல்யாண வீட்டில் இந்த பாடல்தான் ஒலிக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி என்றும் தியேட்டர்ல திருவிழாதான் என்றும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Rajinikanths annaatthe movie marudhani song fans celebrations

Best of Express