இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல மாலில் நடந்துள்ளது. இந்த ஷூட்ங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிற படங்கள் பெரும்பாலும் ஸ்டுடியோக்களில் செட் போட்டு படப்பிடிப்பு நடைபெறும். அல்லது வெளி மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்துவார்கள். இதற்கு காரணம், படப்பிடிப்பு தளத்தில் ரஜினி நடிக்கிறார் என்றாலே கூட்டம் கட்டுக்கு அடங்காமல் கூடிவிடும் அதனால்தான் ரஜினி படங்கள் பெருமைப்பாலும் ஸ்டூடியோவில் வைத்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
தர்பார் படத்துக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரீலீஸ் ஆகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்மையில் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. அதனால், படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் தனது காட்சிகள் அனைத்து நடித்து முடிடித்துக் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இன்னும் சில காட்சிகள் நடிக்க வேண்டியுள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்துதான், ரஜினிகாந்த் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்தார். இதையடுத்து, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், தான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறிய ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் தொடரும் என்று கூறினார்.
ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் அவருடைய அண்ணாத்த படம் தீபாவளிக்கு வருகிறது என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் சென்னை வடபழனியில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றுள்ளது. ரஜினி படப்பிடிபில் கலந்துகொள்ள வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
ரஜினி ஷூட்டிங் நடைபெற இருந்ததால் மாலில் ஏற்கெனவே பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதனால், ரசிகர்கள் கூடுவது தவிர்க்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்தபிறகு ரஜினிகாந்த் அங்கே கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். சென்னை வடபழனியில் உள்ள மாலில் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பில் தனது பகுதியை முழுவதுமாக நடித்து முடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அண்ணாத்த படக்குழு கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்த கொல்கத்தா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“