தர்பார் திருவிழா : தர்பார் படத்தின் சிங்கள் ட்ராக் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியீடு

Darbar new update : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம், 2020 பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம், 24ம் தேதி படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

By: Updated: November 24, 2019, 05:49:23 PM

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம், 2020 பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், நவம்பர் 27ம் தேதி தலைவர் தர்பார் திரைபடத்தின் முதல் சிங்கள் ட்ராக் வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறது.

இந்த சிங்கள் ட்ராக் பாடலை தமிழ் சினிமாவின் பிரபல பாடகருமான எஸ்.பி.பி பாலசுப்ரமணியம் பாடியிருப்பதாக, இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்து இருக்கிறார்.

 

 

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த நவம்பர்.7ம் தேதி ரிலீசானது. இந்நிலையில், அடுத்த மாதம் டிச.12ம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு டீசர், இசை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனிருத் டுவிட் : இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கெட் ரெடி ஃபோக்ஸ்.. சரவெடி ஆல்பம் லோடிங்..!’ என குறிப்பிட்டுள்ளார்.

லைகா பரபரப்பு தகவல் : இதனிடையே, பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில், Bullet No.1 loaded & ready to fire! ???? THALAIVAR FANS get ready for the announcement tomorrow ????#DARBAR என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த அப்டேட், நிச்சயம் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Rajinikanths darbar team announces surprise update today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X