ரஜினியின் தர்பார்: ’பேட்ட’ திரைப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்தை தொடங்கியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்தப் படத்தில் ரஜினி நடிப்பார் என்ற செய்திகள் அப்போதே வெளியானது. பின்னர் சமீபத்தில் அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.
ரஜினியின் 167-வது படமான இதற்கு ‘தர்பார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றுகிறார். படத்திற்கு இசை அனிருத். 2.0 படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் தான் ‘தர்பார்’ படத்தையும் தயாரிக்கிறது.

இந்நிலையில் இதன் படபிடிப்பு பூஜையுடன் இன்று மும்பையில் தொடங்கியுள்ளது. அதன் படங்களை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. தற்போது அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.